பிரான்சில் வாழ் தமிழ் மக்களின் நிதியில் தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள் அறநெறிப்பாடசாலையின் நெறிப்படுத்தலில் மலையகத்தில்
நுவரேலியா மாவட்டத்தில் சிவனொளிபாதமலைக்கு அருகில் அமைந்துள்ள டிக்கோயா என்கின்ற கிராமத்தில் வாழும் மிகவும் வறுமையான நூறு குடும்பங்களுக்கு கடந்த 06.05.2020 அன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கையில் கொறோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் செய்ய முடியாது உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ச்சியாக தமிழ் கலாச்சாரஇணையம் பிரான்ஸ் அமைப்பினால் செய்யப்பட்டு வருகின்றது.
இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டு இந்த உதவியினைவழங்கிய தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பினருக்கும் இதனை நெறிப்படுத்தித்தந்த பாண்டியன்குளம் சிவயோக சுவாமிகள் அறநெறிப் பாடசாலைக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் உறவுகளுக்கும் உதவிகிடைக்கப்பெற்ற தாயக மக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.