முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி மரங்கள் மற்றும் தோட்டத்தின் பயிர்களை வாளல் வெட்டி அழித்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (08.05.2020) வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.
உடுப்புக்குளம் பகுதியில் செல்லத்தம்பி முத்துராஜ் என்ற விவசாயி சூரிய மின்கலத்தினை பயன்படுத்தி விவசாயம் மற்றும் பப்பாசி செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு சில விசமிகள் தனிப்பட்ட காரணத்தினால் இவரின் தோட்டத்திற்குள் புகுந்து பப்பாசி பழ மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்துள்ளார்கள்.
தனிப்பட்ட தகராறின் காரணமாக நான்கிற்கு மேற்பட்டவர்கள் தோட்டத்திற்குள் புகுந்துள்ளார்கள் அங்கு ஆட்கள் அற்ற நிலையில் இவ்வாறான மனிதநேயமற்ற செயற்பாட்டினை செய்துள்ளார்கள்
இதன்போது 126 பயன்தரு பப்பாசி மரங்கள்,முருங்கை மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதுடன் சூரிய மின்கலம்,தண்ணீர் பைப்புகள், நீர் பாய்ச்சும் குழாய்களும் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் கோரத்தின் பதினோராம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற இந்தக் கொடுமை அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலதினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் வேறு ஒரு சம்பவத்தில் 30 இற்கு மேற்பட்ட இளைஞர் கும்பல் போதையில் வாள்களுடன் வந்து பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் இடம்பெற்ற போது, காவல்துறைக்கு முறையிட்டபோது அவர்கள் சம்பவ இடத்திற்கு வர மறுத்தமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறான சம்பவங்களுக்கு சிறிலங்கா படைகளும் ஒட்டுக்குழக்களும் துணைபோகின்றன. இதற்கெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளே மீண்டும் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.