கேணல் வசந்தன் மாஸ்ரர் அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளி!

0
814

விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு இறுதிவரைக்கும் உறுதிதளராது போராடிய மாவீரன். 2009 அந்த இறுதி நாள் ஏன் வந்ததோ. இறுதி நாட்களிலும் தன் மனைவியையும் குழந்தைகளையும் உறவுகளுடன் அனுப்பிவிட்டு தன் கடமையில் கண்ணாயிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரிவர செய்து அந்த வெடிமருந்து தளத்தை காக்க போராடி இறுதிப்போரில் இதேநாளில் முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்.

இன்றும் அவரிடம் போரியல் பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் மரியாதை கூடிய தேசபக்தியுடன் அவர் வாழ்கின்றார். எங்கள் ஆசானே ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் உங்களின் வழித்தடம் பார்த்து என்றும் தானைத்தலைவனின் வழியில் தமிழீழ தேசம் கட்டியெழுப்புவோம். அன்று உங்கள் முகம் மலர்ந்திடும்.

தான் நேசித்த மக்களுக்காக எம் தலைவன் வழியில் கேணல். வசந்தன்

மாவீரனாக அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் இலட்சியக் கனவுகளை எமது கரங்களுக்கு தந்து விட்டார். எமது இனத்தின் விடுதலைக்காக வித்தான வீர மறவர்களின் தாயகக் கனவுடன் கேணல். வசந்தன் என்ற மாவீரனது கனவினையும் எம் கடமை என ஒன்றுபட்டுப் பயணிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here