தொடரும் இராணுவத்தின் வெறியாட்டம்: சட்டத்தரணி சுகாஸ் கண்டனம்!

0
545

நாகர்கோயிலில் முன்னாள் போராளியின் வீட்டில் இராணுவம் தொடர்ச்சியாக வெறியாட்டம் போடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்ற சட்டத்தரணி சுகாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

நாகர் கோவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிப தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை தாக்குதல் நடாத்திய இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததாகவும் , தாக்குதல் நடாத்தி விட்டு செல்லும் போது, தமது இரண்டு கைத்தொலைபேசிகளையும் , இராணுவ தொப்பி ஒன்றினையும் இராணுவத்தினர் தவற விட்டு சென்றுள்ளதாகவும் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here