சற்றுமுன்னர் பளைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிப் பொருட்கள் வழங்கிக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு மதுபோதையில் வந்த துணைஇராணுவ ஒட்டுக்குழு உறுப்பினர்கள் சிலர் யாரைக்கேட்டு இங்கே வந்தீர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், பொலிசை வைத்து தூக்குவோம் என மிரட்டியதுடன் நிவாரணப்பணியில் ஈடுபடும் எமது சக உறுப்பினர்களையும், வாகனங்களையும் தாக்க முயற்சித்தனர்.
இதனால் அந்தப் பிரதேசத்தில் உள்ள 30 மாற்றுத்திறனாளி குடும்பங்களிற்கான நிவாணம் தடைப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அரசோடு சேர்ந்து இயங்கும் இந்த துணைஇராணுவ ஒட்டுக்குழுக்களால் மக்கள் துன்பங்களை தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றார்கள்.