முகக்கவசம் (மாஸ்க்) அணியாத பயணிகளை அடையாளங்கண்டு எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்காக முக்கிய தொடருந்து நிலையங்களில் புலனாய்வுக் கமராக்கள் ( “intelligent” cameras) பொருத்தப்பட வுள்ளன.
முதற்கட்டமாக பாரிஸ் நகரில் அதிக பயணிகள் நெரிசல் மிகுந்த Châtelet தொடருந்து நிலையத்தில் இந்தக் கமராக்கள் பரீட்சிக்கப்படவுள்ளன என்று RATP போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
தானியங்கி முறையில் தோற்றத்தை அடையாளம் காணும் மென் பொருள் பொருத்தப்பட்ட இந்தக் கமராக்கள் இதற்கு முன்னரும் குற்றச் செயல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
முகக்கவசம் அணியாதவர்களை வேறுபடுத்தி கண்டறிந்து சமிக்ஞை செய்து தரவுகளை அனுப்பும் மென் பொருள் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள இந்தப் புலனாய்வுக் கமராக்கள் பயணிகளின் படங்களைப் பரிமாற மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
மே 11 ஆம் திகதிக்குப் பின்னர் பொதுப்
போக்குவரத்துகளில் பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது தெரிந்ததே.
08-05-2020 (குமாரதாஸன்)