பிரான்சில் லூவர்நகரில் வாழ் தமிழ் மக்களின் நிதியில் தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் பாண்டியன்குளம் சிவேயாக சுவாமிகள்
அறநெறிப்பாடசாலையின் நெறிப்படுத்தலில் தாயகத்தில்
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உழவனூர் திருவள்ளுவர் அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு நேற்று 06.05.2020 அன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் செய்ய முடியாது உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணி தமிழ் கலாச்சாரஇணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள் அறநெறிப்பாடசாலையின் நெறிப்படுத்தலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு இந்த உதவியினை வழங்கிய லூவர் நகரில் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பினருக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் உறவுகளுக்கும் உதவிகிடைக்கப்பெற்ற உழவனூர் திருவள்ளுவர் அறநெறிப்பாடசாலையின் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.