ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே LG Polymers என்ற பெயரில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால், அப்பகுதி மக்கள், சாலைகளில் சுருண்டு விழுந்து துடிதுடிக்க உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 8பேர் பலியாகியுள்ளனர். 5000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே ஆர். ஆர். வெங்கடாபுரம் பகுதியில் எல்ஜி பாலிமர் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் தயாரிப்பு இரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு அருகில் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் இராட்சத சிலிண்டர்களின் உள்ள எரிவாயுவை மிகவும் ஆபத்தான முறையில் குழாய் மூலம் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விஷவாயு கசிந்து அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. இதில் அப்பகுதியை சுற்றுயுள்ள 5 கிராமத்தை சேர்ந்த மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகினர். மேலும் பெண்கள் , குழந்தைகள், என ஏராளமானோர் விஷவாயு கசிவின் தாக்கத்தால் சாலையிலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.