மட்டக்களப்பு விபத்தில் பலியான 6 வயதுச் சிறுவனின் இறுதி நிகழ்வு!

0
631

மட்டக்களப்பு,கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை பகுதியில் நேற்று 05.05.2020 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் 06வயது சிறுவன் பலியானதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று நண்பகல் இரண்டு உந்துருளிகள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்த 06 வயது சிறுவனான றொபட் டினேஸ் ஹனான் ஹொசேயா உயிரிழந்ததுடன் தந்தை,தாய் மற்றும் சகோதரன்,மற்றைய உந்துருளியில் பயணித்தவர் என நான்கு பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று புதன்கிழமை சிறுவனின் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. இச்சம்பவத்தால் அப்பகுதி எங்கும் பெரும் சோகத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here