சமூக இடைவெளி பேணினால் விமானக் கட்டணம் அதிகரிக்கும்!

0
807

சமூக இடைவெளி ஆசனத் தெரிவை பயணிகளின் விருப்பத்துக்கு விட்டிருக்கிறது அமெரிக்காவின் Frontier Airlines நிறுவனம்.

சமூக இடைவெளி கருதி தங்களுக்குப் பக்கத்தில் யாரும் அமரக் கூடாது என விரும்பி ஆசனங்களைத் தெரிவு செய்யும் பயணிகளிடம் அதற்கான கூடுதல் கட்டணத்தை அறவிடப்போவதாக அது அறிவித்திருக்கிறது.

இதேவேளை-

விமானங்களில் சமூக இடைவெளி பேணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டால் விமானக் கட்டணம் அதிகரிக்கும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சம்மேளனம் எச்சரித்திருக்கிறது.

ஆசனங்களைத் தவிர்த்து இடைவெளி பேணும் முறைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் சம்மேளனம், அது விமானப் பயணச்சீட்டுகளின் விலையை 50 சதவீதத்தால் அதிகரிக்க நிர்ப்பந்திக்கும் என்று தெரிவித்துள்ளது.

பொதுமுடக்க காலப்பகுதி நிறைவடைந்து நாடுகளுக்கு இடையே விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது புதிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விமானப் பயணிகள், பணியாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானத்தினுள்ளே மேலும் அதிகமான சுத்திகரிப்பு பணிகள் இடம்பெறும்.

பயணிகள் ஏறுவதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடும் நடைமுறைகள் பின்பற்றப்படும். சில விமான சேவை நிறுவனங்கள் தமது பயணிகளை அதிவிரைவான ‘கொவிட் 19’ வைரஸ் பரிசோதனைக்குட்படுத்தி மருத்துவ சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளன.

வேறு சில விமான சேவைகள் தமது பயண ஆசனங்களை சமூக இடைவெளிக்கு ஏற்ப மாற்றி அமைக்கின்றன.

ஆனால் இரு பயணிகளுக்கு இடையில் ஆசனங்களை கைவிடுமாறு விமானக் கம்பனிகள் கேட்கப்பட்டால், அது விமானத்தின் ஆகக் கூடிய மொத்த இருக்கைகளின் வருமானத்தை 62 வீதமாக குறைக்கும் என்றும் அதனால் ரிக்கற் விலைகளை 43 முதல் 54 வீதம் அதிகரிக்க வேண்டி வரலாம் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து சம்மேளனம் (International Air Transport Authority – Iata) தெரிவித்துள்ளது.

இந்த சம்மேளனம் உலகெங்கும் 290 விமான சேவை நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது.

ஆரம்ப கட்ட சுகாதார நடைமுறைகளை தற்சமயம் பின்பற்றுவதோடு விமான நிலையங்களில் வைத்து பயணிகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல், அதிவிரைவு இரத்தப்பரிசோதனைகள், மருத்துவ நற்சான்றிதழ் வழங்குதல் போன்ற நீண்ட காலத்திட்டங்களை முன்னெடுக்கலாமா என்பது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை பெறப்படும் எனவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

(06-05-2020 ) – குமாரதாஸன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here