பிரான்சு மூதாளர் அவையின் இரண்டாவது அகவை நிறைவு விழா கடந்த 25.05.2015 திங்கட்கிழமை லாக்கூர்நோவ் பகுதியில் இடம்பெற்றது.
பாரிசு மற்றும் பாரிசின் புறநகர்ப் பகுதிகளிலும் வாழ்கின்ற மூதாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வரவேற்புரை, நாடகம், கவிதை, பாடல்கள், பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்வுகள் மூதாளர்களால் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன.
தமது உணர்வுகளை நிழ்வுகளின் வாயிலாக திறம்பட வெளிக்காட்டியிருந்தமை பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது.
நன்றியுரையைத் தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
ஒவ்வொரு மாதமும் இறுதித் திங்கட்கிழமை இரண்டு மணியில் இருந்து ஐந்து மணி வரை மூதாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
ஒவ்வொரு சந்திப்பிலும் மூதாளர்கள் மிக மகிழ்ச்சியாக கலந்து பேசிக்கொள்வார்கள். இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனைத்து மூதாளர்களையும் அழைக்கிறது பிரான்சு மூதாளர் பேரவை.