வவுனியாவில் 21 வயது இளம்பெண் கிணற்றுக்குப் பலி !

0
380

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02.05.2020) 10 மணியளவில் கிணற்றிலிருந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு கிணற்றில் வீழ்ந்ததனை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டெடுத்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உ யிரிழந்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்தமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here