முல்லைத்தீவு – கரும்புள்ளியான் பகுதியிலில் இளைஞரொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் றொசாந்தன் என்கிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடியபோது இன்று காலை அவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சிறுவயதிலேயே தன்னுடைய தந்தை தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது இன்று காலை அவர்கள் கிணற்றுக்கு நீர் எடுப்பதற்காக சென்றபோது கிணற்றினுள் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.