பளையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

0
545

பளையில் காணாமல் போன மாணவன் இன்று (03.05.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பளை, முள்ளியடியை சேர்ந்த பாடசாலை மாணவனான ஆர்.அனோஜன் என்பவரே, இன்று புலோப்பளை கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரை காணவில்லையென கடந்த 28ஆம் திகதி பெற்றோரால், பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவன் பளை தர்மக்கேணி பாடசாலையில் கல்வி பயின்றவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here