பிரான்சில் சேர்ஜி நகரில் வாழ் தமிழ் மக்களின் நிதியில் கடந்த 01.05.2020 வெள்ளிக்கிழமை தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் மூலம் பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள் அறநெறிப் பாடசாலையின் நெறிப்படுத்தலில் தாயகத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறாட்டிகுளம், மூன்றுமுறிப்பு கிராமசேவகர் பிரிவில் உள்ள சிறாட்டிகுளம், பனங்காமம், மூன்றுமுறிப்பு, கிடாப்பிடித்தகுளம், இளமருதங்குளம், வீரப்பராயன்குளம், கொம்புவைத்தகுளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களான முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் அடங்கிய 63 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளனர்.
தாயகத்தில் கொறோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் செய்ய முடியாது உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு இந்த உதவியினை வழங்கிய சேர்ஜியில் வாழும் கோல்பேட்(பிரான்ஸ்),றமேஸ் (லண்டன்),ஜீவா,கௌரி,குட்டி,பகீர்,மயூரா,றூபா,சுந்தர்,விஜயன்,உருத்திரகுமார்,றூபி,கண்ணன்,குமாரதன்,சங்கர் மற்றும் அலன்ஆகியோருக்கும் தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பினருக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் உறவுகளுக்கும் உதவிகிடைக்கப்பெற்ற தாயக மக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.