கத்தாரில் இன்று காலை கடும் காற்றுடன் கூடிய காலநிலை பதிவானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மணித்தியலாத்திற்கு 72 KM என்ற அளவில் வீசிய கடும் காற்றினால் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கென ஒதுக்கப்பட்ட Hazm Mebaireek General Hospital (HMGH) வைத்தியசாலையின் இரண்டு விரிவாக்கக் கூடாரங்கள் சரிந்து விழுந்துள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது கொரோனா வைரஸுக்கு சிகிச்சை வழங்கும் Hazm Mebaireek General Hospital (HMGH) விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கூடாரங்கள் அமைந்துள்ளன. அந்தக் கூடாரங்களில் இரண்டு பலமான காற்றினால் சரிந்து விழுந்துள்ளன.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் உடனடியாக ராஸ் லபான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். என்றாலும் அங்கு பணி புரிந்த 23 ஊழியர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகள் எவருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.