பிரான்சில் வைரஸ் தொற்று நிலைவரத்தைப் பொறுத்து நிலைமை மாறுபடலாம்!

0
486

நாடு முழுவதும் வைரஸ் தொற்றின் பரம்பல் தொடர்பாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டிருக்கும் வரைபடம் இது.

தொற்றின் தீவிரம் மிகுந்த பகுதிகள் சிவப்பு (rouge) நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. ஓரளவு பாதிக்கப்பட்ட பிராந்தியங்கள் செம்மஞ்சள்(orange) நிறத்திலும் தொற்று அரிதாக உள்ள பகுதிகள் பச்சை (vert) வர்ணத்திலும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்த வரைபடத்தில் நாளாந்த நிலைமைக்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்பட்டு வரும் மே 7 ஆம் திகதி மற்றொரு வரைபடம் வெளியாகும் என்றும், தற்போது சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டிருக்கும் பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் (’Île-de-France) மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 11 ஆம் திகதி முதல் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவர முன்னெடுக்கப் படவுள்ள திட்டங்கள் அந்தந்தப் பிராந்தியங்களின் வைரஸ் தொற்று நிலைவரத்தைப் பொறுத்து மாறுபடலாம் என்று நாட்டின் பிரதமர் அறிவித்திருப்பது தெரிந்ததே.

(வரைபடம் :பரிஷியன் ஊடகம்)

30-04-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here