இந்தத் தொழிலாளர் தினத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் உலகு எங்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளர் உரிமைக்கும் மக்கள் உரிமைக்கும் குரல் கொடுத்து வந்திருக்கின்றோம்.
போரின் உச்சக்கட்டத்தில் மே 2009 இல் பிரான்ஸ் தொழிலாளர் தினத்தில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் போரை நிறுத்தவும், எமது உரிமைக்குக் குரல் கொடுத்து நின்றோம்.
எங்களுடன் சேர்ந்து பிரான்சு தொழிலார்கள் எங்களுடன் சேர்ந்து எங்களுக்காக குரல் கொடுத்தார்கள்.
நாளை மே 1 2020, தொழிலாளர் தினம் ஆனால், உலகெங்கும் மக்கள், இந்தப் பேரிடர் காலசூழலில் தொழில் நிலையங்கள் மூடப்பட்டு முடக்கப்பட்டு இருக்கின்றோம்.
அதேநேரத்தில் உயிர்களைப் பாதுகாக்க மருத்துவமனைகளில், மருத்துவர், தாதிகள், துப்புரவுத் தொழிலாளர்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் தமது உயிர்களை பணயமாக வைத்து செயற்படுகின்றார்கள்.
இந்த நாளில் நாம் வழமைபோல் எமது உரிமைக் குரலைக் கொடுக்க முடியாவிட்டாலும். மே 1 – 2020 அன்றும் எமது குரல் உலகத்தின் உரிமைக்காக போராடும் அனைத்துத் தொழிலாளர்களுடன் கைகோர்த்து நிற்போம்.