2009 தமிழின அழிப்புப் போல பல்வேறு வடிவங்களில் தொடரும் அவலங்கள்!

0
888

சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்ததாக கருதப்படும் இளம் ஆளுமையும், கொரொனா நிவாரணப்பணிகளில் தன் சிறந்த பங்களிப்பை வழங்கியவருமான செந்தூரன்,
அதே போல 31 வயதான இளம் தாய் ஒருவர்,
சமநேரத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு முதியவர்கள் என தற்கொலைகள் மலிந்த தேசமாக தமிழர்தேசம் மாறிவருகிறது.

கொரோனாவின் கோரத்தால் புலம்பெயர்ந்து வாழும் இருநூற்றிற்கும் மேற்பட்ட எம் உறவுகள் சாவினைத்தழுவியுள்ளார்கள்.
புலம்பெயர்ந்து எண்ணற்ற கனவுகளுடன் தம் வாழ்வை கட்டமைத்த பலர் கண்மூடி, கண் திறப்பதற்குள், கொரோனாவின் அபாயத்தை புரியமுதலே மரணித்துவிட்டார்கள்.
கொரோனாவால் பலியானவர்களில் பலர் புலம்பெயர்ந்த இளம் குடும்பஸ்தர்கள்.
தம் அன்பிற்குரியவர்களை, பொருளாதாரத்திற்காக தம்மை சார்ந்திருந்த தம் உறவுகளை தவிக்கவைத்திருக்கின்றது பலரின் மரணங்கள்.
சற்று அவதானமாக நாம் நடந்தால் கொரோனா மரணங்களை தவிர்த்து எம் அன்பிற்குரியவர்களுடன் இன்னும் சில காலங்கள் வாழலாம் என்பது நிஜம்.
இந்த மரணங்கள் ஒருபுறம் இருக்க தன்னால் அனைத்து பாடங்களிலும் அதிவிசேட சித்தி அதாவது 9A எடுக்க முடியவில்லை என தற்கொலை செய்துகொண்ட சந்திரன் கம்ஷிகா என்னும் மாணவியின் மரணம் பெரும் மனத்துயரை தருகின்றது.
பந்தயக்குதிரைகளாக மாணவர்களை மாற்றி வைத்திருக்கும் பெற்றோர்களின் மீதும், சமூகத்தின் மீதும் கட்டுக்கடங்காத கோபம் ஏற்படுகின்றது.
இந்த இளம் மாணவியின் தவறான முடிவிற்கு சீழ்படிந்த எமது சமூக்கட்டமைப்பே காரணமாகும்.
தொடர் இழப்புக்களையும், அவலங்களையும் சந்தித்துவரும் எம் இனத்தின் துயரங்கள் தொடர்ந்துகொண்டிருப்பதை லண்டன் இல்போர்ட் என்னுமிடத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.
தந்தையே தன் இரு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் மனிதவினத்தின் அதியுச்சகொடூரம்.

2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு உச்சம் பெற்ற தமிழின அழிப்பு போல பல அவலங்கள் இன்றுவரை பல்வேறு வடிவங்களில் எம்மினத்தில் தொடர்வது மிக வேதனையானது.

எம்மினத்தின் ஒவ்வொரு இழப்பும் எம் தேசத்தின் இழப்பு .
அது தடுக்கப்படவேண்டும் என்னும் வேதனையின் வெளிப்பாடே இப்பதிவு..

அன்பரசன் நடராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here