கிளிநொச்சி கரைச்சி மாயவனூர் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

0
421

பிரான்சு தமிழ்க் கலாச்சார இணையம் அமைப்பின் மூலம் பிரான்ஸ் தமிழ் மக்களின் நிதி உதவியின் ஊடாக தாயகத்தில்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாயவனூர் கிராமத்தில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களுக்கு நேற்று 28.04.2020 செவ்வாய்க்கிழமை உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் செய்ய முடியாது உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள் அறநெறிபாடசாலையின் நெறிப்படுத்தளில் மாயவனூர் கிராமஅபிவிருத்தி சங்கத்தினால் மாயவனூர் கிராமத்தில் வசிக்கும் வறிய குடும்பங்களில் மோசமான நிலையிலுள்ள 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பினருக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் உறவுகளுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here