கிழக்கு லண்டன் இல்போர்டில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து மூன்று வயதுடைய ஆண் குழந்தை மற்றும் ஒருவயதுடைய பெண் குழந்தை தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
அத்துடன் தந்தையும் கத்திகுத்துக் காயத்து டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் மேலும் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.’கொலை-தற்கொலை முயற்சி என்ற கோணத்தில் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரைணகளை முன்னெடுத்துள்ள லண்டன் பொலிஸார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.சம்பவதினத்தன்று, குழந்தைகளின் தாய் குறித்த வீட்டில் தன்னை சித்திரவதை செய்வது போல் கத்தியதாகவும் வீதியில் ஓடிவந்ததாகவும் நேரில் பார்த்தவர்களும் அயலவர்களும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வேறு எவரையும் சந்தேகிக்கவில்லை. எனினும் சிறப்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நிதின்குமார், நிஷா தம்பதிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தில் நிதின்குமார் நிகீஸ் – வயது 3 மற்றும் நிதின்குமார் பவின்யா – வயது 1 ஆகிய பாலகர்களே பரிதாபமாக பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதின்குமார் தமது குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள 54 வயதான சண்முகதேவதுரை என்பவரது கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்.
நிதின்குமார் தொடர்பில் சண்முகதேவதுரை தெரிவிக்கையில்,
நித்தி ஒரு அற்புதமான மனிதர், விசுவாசமான தொழிலாளி.அவர் காலை-09 மணிக்கு கடையைத் திறந்தார். மிகவும் சாதாரணமாகவே வேலை செய்தார், அவர் வீட்டுக்குப் புறப்படுவதற்கு சற்று முன்பு எனக்குத் தேநீர் தயாரித்து தந்தார்.ஊரடங்கு நாட்களில் வேலைக்கு செல்வது தமது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று நித்தி கூறி வந்ததாகவும் சண்முகதேவதுரை குறிப்பிட்டுள்ளார்.குடும்பப் பிரச்சினை காரணமாகவே நிதின்குமார் இந்தக் கோர முடிவை எடுத்திருக்கலாம் என தேவதுரை தெரிவித்துள்ளார்.3 வயது மகன் மற்றும் ஒரு வயதுப் பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பதறிய தாயார் தெருவுக்கு வந்து உதவி கோரியதை நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிதின்குமாரின் மகள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரியவந்துள்ளது. நிதின்குமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களில் பலர் தெரிவித்துள்ளனர்.நிதின்குமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களில் பலர் தெரிவித்துள்ளனர்.தற்போது தற்கொலைக்கு முயன்ற நிதின்குமார் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் பிரித்தானிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(நன்றி:ஈழம்ரஞ்சன்)