சிலவற்றை பாராட்ட நாம் ஒருபோதும் பின்நிற்கக்கூடாது.
க.பொ.த. சாதரணதர பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகளான
செல்விகள் பவதாரிணி கெங்காதரன் , விதுர்சிகா மதியழகன் ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பதை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.
யுத்தத்தில் தந்தையினை இழந்த பவதாரிணி 8A B சித்தியினைப்பெற்று சாதனை படைத்த அதேவேளை,
இறுதியுத்தத்தில் எறிகணை வீச்சினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட விதுர்சிகா 6AB2C சித்தியினைப்பெற்று தமிழினத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்கள்.
இறுதிப் போரின் இழப்புக்களையும், அது தந்த வலிகளையும் தாங்கி, சக்கரநாற்காலியில் சென்று கல்வி கற்று தாம் சார்ந்த இனத்திற்கும், தம் மண்ணுக்கும் பெருமை சேர்த்த இம்மாணவிகளிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.!
இவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னாலுள்ள அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
அன்பரசன் நடராஜா.