ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தையார் யாழில் மரணம்!

0
1826

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தையார் வைரவப்பிள்ளை வெற்றிவேல் (வயது75) இன்று (27.04.2020) திங்கட்கிழமை யாழில் உயிழந்துள்ளார்.

இத்தாவில் பளையைச் சேர்ந்த இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, தனது தந்தை இறப்பதற்கு முன்னர் கைபேசியின் காணொளிமூலம் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கையை ஈவிரக்கமின்றி தமிழக அரசு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தந்தையின் உடலையாவது தான் இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய உடல்
இத்தாவில் பளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்
நாளை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)


.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here