வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் அமரர் சிவராசா ஜெகன் அவர்களின் இழப்பு எமது சமூகத்திற்கு துயர் மிகுந்த பேரிழப்பாகும்.
இவர் முல்லைத்தீவு மாவட்ட புள்ளிவிபரத்திணைக்களத்தில் பொறுப்பு நிலை உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர்.
இறுதி யுத்த காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் எண்ணிக்கை தொடர்பான தவறான புள்ளிவிபரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து இவருடைய ஆதரவுடன் வெளியிட முயன்றது.
இதற்கு இவர் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இதனால் சிறீலங்கா அரசாங்கத்தின் கொடூர சிறைவாசம் உட்பட பல இன்னோரன்ன துன்ப துயரங்களை அனுபவித்தவர்.
அதனைத்தொடர்ந்து இவரால் அங்கு வாழமுடியாத நிலையில் தனது பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு
இங்கு வந்து அரசியல் தஞ்சம் பெற்று சமூக சேவையாளனாக வாழ்ந்தார்.
இங்கும் மொழி, இலக்கியம், ஊடகப்பணி , இளையோர் தாய்மொழிக்கல்வி என மக்கள் நலன் சார்ந்த பணிகளை பல அமைப்புகளுடனும், தனிநபர்களுடனும் இணைந்து தொடர்ந்தும் மேற்கொண்டவர்.
இவர் எதிர்காலத்தில் நிச்சயமாக எமது மக்களால் போற்றி மதிப்பளிக்கப்பட வேண்டியவர்.
தேசியவிடுதலைப்போராட்டத்தின் அதியுச்ச தியாகங்களை உணர்ந்து செயற்பட்ட இவர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு இறுதி வரை
துணைபோகவில்லை.
அன்று இவர் சிறீலங்கா அரசாங்கத்தின் உண்மைக்கு மாறான புள்ளிவிபர அறிக்கை வெளியீட்டுக்கு
ஆதரவாக செயற்பட்டிருந்தால், இன்று அவர் அங்கு பல வசதி வாய்ப்புகள் நிறைந்த ஓர் அதி உயர் நிலை அதிகாரியாக கடமையாற்றியிருப்பார்.
இவர் எமது இன விடுதலைக்காக தனது பல்கலைக்கழகக் காலம் தொட்டு இறுதிவரை ஆற்றிய பணிகள் ஏராளமாகும்.
இவருடைய பேரிழப்பால் துயருற்றுள்ள குடும்பத்தவர்கள், ஊரவர்கள் , உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உட்பட அனைவரின் துயரிலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.
- சபேசன் தர்மதுரை.