யேர்மனியில் கொரோனாவிற்கு தமிழாலய ஆசிரியை பலி!

0
593

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியையுமான யாழ்.கீரிமலையைச் சேர்ந்த
விஜயலட்சுமி குணபாலசிங்கம் (வயது 50) அவர்கள் நேற்று ( 24.4.2020) வெள்ளிக்கிழமை கொடிய கொரோனா தொற்றிற்கு இலக்காகி சாவடைந்துள்ளார்.

இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிகிச்சை பலனின்றி நேற்று சாவடைந்துள்ளார்.

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here