பிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துவமனையில் கடமையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது 48) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பேர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்.எச்.எஸ் அறக்கட்டளை மரு்துவமனையில் பணிபுரிந்தார்,
புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை மருத்துவத்தின் ஒரு கிளையாக மருத்துவராக ராசையா பணியாற்றினார்.
விஷ் என அனைவராலும் அழைக்கப்படும் மருத்துவர் விஷ்ணு ராசையா அன்பான கணவர் மற்றும் தந்தை” அவரின் மரணம் எங்களுக்கு போிழப்பாகும் என அவரது மனைவி லிசா கூறியுள்ளார்.
விஷ் தனது வேலையை நேசித்தார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு வேலையை விட மிக அதிகம். அவர் கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினரையும் அவர் தனது சொந்தமாகக் கருதினார் நான் அவரைப் பற்றிப் பேசமுடியாது என லிசா குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை பெற்ற வொர்செஸ்டர்ஷைர் ராயல் மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார் லிசா.
மருத்துவர் விஷ்ணாவுக்கு கேட்லி என்ற மகள் இருக்கின்றார்.
மலேசியாவிலும், டிரினிடாடிலும் குடும்ப பின்னணியைக் கொண்டவர் மருத்துவர் ராசையா.
பேர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்.எச்.எஸ் அறக்கட்டளை அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி சாரா-ஜேன் மார்ஷ் கூறிகையில்:-
அவரை இவ்வளவு கொடூரமான முறையில் இழப்பது நியாயமற்றது. எங்களுக்கு வரும் கண்ணீர் விஷ்சின் மதிப்புகளை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவரது பார்வை, தைரியம் மற்றும் இரக்கத்தை நம் இதயங்களில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
மிட்லாண்ட்டில் மட்டும் குறைந்தது 13 என்.எச்.எஸ் ஊழியர்கள் இறந்துள்ளனர், நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது