பிரான்சில் தமிழ் இளம் ஆசிரிய பயிற்றுநர் சுகயீனத்தால் மரணம்!

0
2078

பிரான்சில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் இளம் ஆசிரிய பயிற்றுநர் சிவராசா ஜெகன் (வயது 43) அவர்கள் மாரடைப்புக் காரணமாக இன்று (2404.2020) வெள்ளிக்கிழமை அதிகாலை உயிழந்துள்ளார்.

யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவரும் பிரான்சு சார்சல் பகுதியில் வசித்து வந்த இவருக்கு மூன்று நாள் காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா என அச்சமடைந்ததால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் தமிழ்ச் சோலைப் பள்ளி ஆசிரியரும்.
யாழ்.பல்கலை புவியியல் சிறப்புக்கலை பட்டதாரியும்
முல்லைத்தீவு மாவட்ட கல்வித் திணைக்கள புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பாளரும் ஆவார்.
பிரான்சில்
தமிழர் கல்விமேம்பாட்டுத் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ்ச் சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வில் புள்ளி விபரங்களுடன் திறம்பட பயிற்றுதலை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இவர் யாழ். பல்கலையில் பங்குபற்றாத எந்த நிகழ்வும் இல்லை. நாடகங்கள் முதல் விளையாட்டுக்கள் வரை என சகலவற்றிலும் பங்குபற்றிய திறமைமிக்கவர். பிரான்சிலும் பல பட்டி மன்றங்களிலும் விவாத அரங்குகளிலும் பங்குபற்றியுள்ளார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here