கொரோனா தொற்று 368 ஆக உயர்வு: வெலிசறை சிறிலங்கா கடற்படை முகாமுக்குச் சீல்!

0
793

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 368ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் வெலிசறை சிறிலங்கா கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதையடுத்து, குறிப்பிட்ட கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 30 பேர் வெலிசர சிறிலங்கா கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 368ஆக அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here