மகிந்தவை திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது – ராமதாஸ்

0
350
ramadossஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை திருப்பதி வருவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாகவிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, டிசெம்பர் 9 ஆம் திகதி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்துக்கு வர இருப்பதாகவும், அடுத்த நாள் காலை சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஈழத்தில் 2,000 க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அவரை, திருப்பதி ஆலயத்தில் மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும்.

தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக யாராலும் புண்படுத்த முடியாது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக் கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத அவர், நினைத்த போதெல்லாம் இந்தியா வந்து செல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என வலி யுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here