உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக சிறிலங்காவில் திடீர்என அறிவிக்கப்பட்ட ஊரடங்குசட்டத்தினால் சிறு பிள்ளைகளைக்கொண்ட குடும்பங்கள் பால் மாவைப் பெற்றுக்கொள்வதற்காக மிகவும் கடினப்பட்டுக்கொண்டிருந்தனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள மாந்தைகிழக்கு பிரதேசத்தைச்சேர்ந்த 15 கிராம சேவையாளர் பிரிவைச்சேர்ந்த 164 குடும்பங்களுக்கான பால்மா வழங்கும் நிகழ்வு தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பின் நிதியில் பாண்டியன்குளம் சிவயோக சுவாமிகள் அறநெறிப்பாடசாலையின் ஊடாக இன்று (19.04.2020) ஞாயிற்றுக்கிழமை அன்னை பூபதி அம்மா அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்றய தினம் பாண்டியன்குளம் , செல்வபுரம் ஆகிய இரு கிராமங்களைச்சேர்ந்த 51 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. ஏனைய கிராமங்களுக்கு மழை காரணமாக இன்று வளங்கமுடியாமல் போயுள்ளது. நாளை 20.04.2020 திங்கட்கிழமை வழங்கப்படும்.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு தமிழ்க்கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பு பாண்டியன்குளம் சிவயோகசுவாமிகள்அறநெறிப்பாடசாலை ஊடாக எமது மக்களுக்கு பல்வேறு நிவாரணப்பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.
அதேபோல் பல்வேறு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் செய்திருந்தனர்.எனவே உங்கள் அனைவருக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.