
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை, கடந்த 10 வருடங்களுக்கு மேலாகத் தேடிய தந்தை ஒருவர் நேற்று (16.04.2020) வியாழக்கிழமை காலமானார்.
முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பொன்னையா நாகராசா (வயது-61) என்பவரே காலமானார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடியும் தறுவாயில் பொக்கணைப் பகுதியில் தனது மகனை இவர் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் யாரையும் நாம் பொறுப்பேற்க இல்லையென இராணுவம் கைவிரித்ததைத் தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி வேண்டித் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 10 வருடங்களாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய கோரி, உறவினர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்திலும் அவர் பங்கெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.