பிரான்சு வாழ் தமிழர்களால் மன்னார் மாவட்டத்தில் உலர் உணவுப் பொதி வழங்கல்!

0
643

பிரான்ஸ் புலம்பெயர் தமிழர்களால் நேற்று 16 04.2020 வியாழக்கிழமை கொரோன தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற மன்னார் மாவட்டத்தில் ஒருபகுதியில் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களான நறுவிலிக்குளத்தில் 31 குடும்பங்களுக்கும், சிறுக்கண்டல் பகுதியில் 31 குடும்பங்களுக்கும், செட்டியார் கட்டையடம்பனில் 36 குடும்பங்களுக்கும் , பண்டிவிரிச்சானில் 2 குடும்பங்களுக்குமாக மொத்தம் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here