இல்-து -பிரான்ஸ் பிராந்தியத்தில் NAVIGO பயண அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பயண அட்டையின் 100 யூரோக்களை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்,
வருடாந்த NAVIGO பயண அட்டை வாங்கிய அல்லது ஏப்ரல் அல்லது மே மாதங்களுக்கு ஒரு மாத பாஸ் வாங்கிய அனைவரும் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்துக்கு € 75 மற்றும் , மே மாதத்துக்கு € 25 திருப்பிச் செலுத்துவதாக இ ல்-து -பிரான்ஸ் தலைவரான வலேரி பெக்ரெஸ் அறிவித்துள்ளார்.
பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி ?
டிசெம்பரில் போக்குவரத்து வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்களுக்குத் திருப்பிச் செலுத்தியதைப் போன்ற ஒரு செயல்பாட்டில் நவிகோ பயண அட்டை வைத்திருப்பவர்கள் இணையத் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான இணையத் தளம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை, இருப்பினும் மே 11 ஆம் திகதிக்கு பின்னர் அது தயாராக இருக்கும் என்று வலேரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.
100 யூரோக்கள் அனைத்து மாதாந்த அல்லது வருடாந்த பயண அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கிறது – ஏப்ரல் , மே மாதங்களில் பயணம் செய்தவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும்.
அவர்களுக்கும் பணத்தைத் திருப்பி கொடுப்பதன் காரணம் ,
இந்த அபாய காலகட்டத்தில் நமது நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகளைத் தயங்காது செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
இதேவேளை, வாராந்திர பாஸ் உள்ளவர்களுகள் பணத்தைத் திரும்பப் பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.