ஊர்­கா­வற்­று­றையில் சிறுமி மீது துஷ்பி­ர­யோகம்: சந்­தேக நபர் தப்பி ஓட்டம்!

0
428

rape-mainயாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறைப் பகு­தியில் சிறுமி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சந்­தேக நபரை பொலிஸார் தேடி வரு­கின்­றனர். இவர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; ஊர்­கா­வற்­றுறை – நாரந்­தனைப் பகு­தியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் தொடர்ந்து இரு வாரம் பாட­சா­லைக்கு சமுக­ம­ளிக்­காமை தொடர்பில் பாட­சாலை அதி­பரால் கிராம அலு­வ­லரின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
கிராம அலு­வலர் மேற்­கொண்ட விசா­ர­ணையின் அடிப்­ப­டையில் சிறுமி பாதிக்­கப்­பட்­டமை தொடர்பில் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.
இதன் பின்னர் சிறுவர் நன்­ந­டத்தைப் பிரி­வினர் மேற்­கொண்ட திடீர் தேடுதல் நட­வ­டிக்­கையின் அடிப்­ப­டையில், சிறு­மியை அயல் வீட்டைச் சேர்ந்த இளம் குடும்­பஸ்தர் ஒருவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.
சம்­பவம் தொடர்பில் சிறுவர் நன்­ந­டத்தைப் பிரி­வினர் நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றி­ருக்­கின்­றனர். இதன் பின்னர் நீதி­மன்றின் பணிப்­பு­ரைக்­க­மைய பொலிஸார் சந்­தேக நபர் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காகச் சென்­ற­வேளை அவர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
குறித்த சிறு­மியின் தாயார் மறு­மணம் முடித்த நிலையில் இரண்­டா­வது கண­வ­ருடன் சிறு­மியை விட்­டு­விட்டு மத்­திய கிழக்கு நாடு ஒன்றில் பணி­பு­ரிந்­து­வ­ரு­வ­தா­கவும் சிறுமி தனி­மையில் இருந்­த­போதே துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
குறித்த சிறுமி சிறுவர் நன்­ந­டத்தைப் பிரி­வி­ன­ருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்,
தமது வீட்டுக்கு அயலில் உள்ள இளம்குடும்பஸ்தர் ஒருவர் தான் தனிமையில் இருந்தபோது தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here