பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டுபேர் உயிரிழந்தும் ஐந்துபேர் காயமடைந்தும் உள்ளனர்.
தென் மேற்கு எல்லைப் பிராந்தியமான Hautes-Pyrénées இல் இன்று மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
Pau என்னும் இடத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் ஐந்தாவது பீரங்கி உலங்குவானூர்தி படைப்பிரிவுக்குச் சொந்தமான உலங்குவானூர்தியே ஏழு படையினருடன் விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உலங்குவானூர்தி அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயமே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குமாரதாஸன்.