கனடாவில் மனைவியை தொடர்ந்து கணவரும் கொரோனாவினால் பலி!

0
793

கனடாவில் கொரோனாவின் கொடூரத்தில் நேற்றுமுன்தினம் துணைவியார் பலியான நிலையில், இன்று 15.04.2020 புதன்கிழமை கணவரும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து கொரோனாவின் கோரத்திற்கு பலியான சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அவரது கணவரான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகராஜா தேசிங்குராஜா (சோதி) அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் பெற்றோரான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த வாரம் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர்.


இவர்களின் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் பெற்றோரை இழந்து தவிக்கின்றார்கள்.

இருவருடைய இறுதி நிகழ்வுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.


(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here