பசிலின் பிணை மனு நிராகரிப்பு: ஜூன் 10 வரை விளக்கமறியல்!

0
158

pasilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வரின் பிணை மனுவை நிராகரித்த கடுவலை நீதிவான், அவர்களை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
திவிநெகும திணைக்களத்தின் சேவையாளர்களின் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜெயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க மற்றும் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் பந்துல திலகசிறி ஆகியோரையே எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிவான் தம்மிக்க ஹேமபால நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here