சுவிஸ் போதகரினால் கொரோனா தொற்றிற்கு உள்ளான ஆபத்திலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் அதற்குள் தனிமை மையங்கள் மீண்டும் தமிழர் தாயகப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்படுகின்றன.
திட்டமிட்ட தனிமைப்படுத்தல் மையங்களின் வருகையால் தாக்கப்படப் போகிறோமோ என பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இராகமையைச் சேர்ந்தவர்கள் 302 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முழங்காவிலில் கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இன்று அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்திற்கு நோய்பரவ இது ஆரம்பப்புள்ளியாகக் கூட இருக்கலாம் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.