தமிழ்க் கலாச்சார இணையம் பிரான்சு அமைப்பின் நிதியில் பாண்டியன்குளம் சிவயோக சுவாமிகள் அறநெறிப் பாடசாலையின் ஊடாக இன்று வவுனியா வடக்கு பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் வாழும் கிராமமான காஞ்சுரமோட்டை என்னும் கிராமத்தில் வசிக்கும் இருபத்து இரண்டு குடும்பங்களுக்கும் உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஓலைைக் குடிசையில் மின்சாரம் இன்றியும் குடி நீருக்காக ஐந்து கிலோமீற்றர் நடக்கவேண்டியும் உள்ளது.
அத்துடன் போக்கு வரத்து வசதிகள் எதுவும் இல்லை. நோய் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு வாகனம் இல்லை.பாடசாலைக்கு பத்து கிலோமீற்றர் நடக்கவேண்டும். இவ்வாறு பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இன்றைய நாளிலே உணவுப்பொதி வழங்கியமை மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
இந்த மக்களுக்கு உதவிசெய்த தமிழ் கலாச்சார இணையம் பிரான்சு அமைப்பினர்களுக்கு மிகவும் மனம் நிறைந்த நன்றிகள் அந்த மக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு வழங்கப்பட்ட பொதியில் உள்ளடக்கப்பட்டவை..
அரிசி 10kg
மா 05kg
சீனி 03kg
பருப்பு 01kg
தேயிலை 100g
மீன்ரின் 01
சவர்க்காரம் 01