இலஞ்சக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச கால்பந்து நிறுவனமான ஃபிஃபாவின் (FIFA) 6 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், வாங்கியதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து பொலிஸாரால் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளுக்காக அவர்களை அமெரிக்காவிற்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டுள்ளது.