உன் இழப்பை தாங்க முடியவில்லையடா… கிருபா…
கிழக்கு முள்ளிவாய்க்கால் மண் இன்று ஒரு பரம்பரை விவசாயியை இழந்து தவித்து நிற்கின்றது.,,
கிழக்கு முள்ளிவாய்க்காலில் 1994-ம் ஆண்டு நந்தகுமார் கௌரி தம்பதிகளுக்கு ஒரேயொரு மகனாக பிறந்தவன் கிருபா…..
இவனுக்கு ஒரே ஒரு சகோதரியும் கூடவே பிறந்தவள்…., சிறுவயதில் இருந்தே எனது குடும்பமும் , இவர்களும் இணைபிரியாத உறவினர்கள்….
இறுதி யுத்தத்திலே பொக்கணையில் என் கண்முன்னே தந்தையை இழந்தவன் தவித்தவன்..
பின் தனது சகோதரியையும் முள்ளிவாய்க்கால் கோர யுத்தத்தில் பலிகொடுத்து தனது தாயாருடன் மிகுந்த துக்கத்துடன் வாழ்ந்து வந்தவன் கிருபா,,,,
சிறுவயதிலே பாடசாலைக் கல்வியை விட்டு விலகிய கிருபா.. அவனது விடாமுயற்சியால் மீண்டும் சொந்த மண்ணிலே குடியேறி… தனது தாயுடன் வசித்து வந்தவன்,..
விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்ட கிருபா தனது தந்தையின் இடத்தை விவசாயியாக பிடித்தான்.. குமுழமுனை,,,முள்ளிவாய்க்கால் என விவசாயம் செய்து நல்ல விவசாயியாக வளர்ந்து வந்தவன்…
குமுளமுனையிலே தனது வாழ்க்கையையும் வாழ பல வருடங்களாகக் காதலித்து 2020 மே மாதம் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது…
உலகையே உலுக்கி பட்டினியாக்கி வரும் கொரோனாவை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் சோறு போடும் கனவோடு செல்கையில் இவனும் இன்றைய தினம் காலையில் தனது சொந்த உழவியந்திரத்தை எடுத்துக் கொண்டு, தனது வீட்டிலிருந்து 200M தாண்டுவதற்கு முன்பே உழவியந்திரம் தடம் புரண்டு அந்த இடத்திலேயே பலியாகினான்…
தனது தாயை தனியாக தவிக்கவிட்டு தந்தையிடமும் தனது சகோதரியிடமும் போய்ச் சேர்ந்தான்.,,
இவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு.. ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
என்றும் உன் நினைவுகளுடன்
மகா தர்சன்.