புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு – தீபச்செல்வன்

0
888

எண்ணற்ற கனவுகளுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளில் பலர் கொரோனா என்னும் கொடிய தொற்றுநோயால் மரணித்துக் கொண்டிருப்பதை மனவலியினைத்தருகின்றது.

இயல்பாகவே கடும் உழைப்பாளிகளான எம் மக்கள் புலம்பெயர் தேசங்களில் ஓய்வற்று வேலைசெய்து பலதரப்பட்ட நோய்களை தம்மகத்தே கொண்டிருக்கின்றார்கள்.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களும், சீரற்ற உணவுமுறையும் எம்மவர்களது நோயெதிர்ப்புச் சக்தியினை கணிசமாக குறைத்திருக்கின்றது.

பிற சமூகங்களில் அநேகமாக முதியவர்களும், ஏற்கனவே பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மரணமடைய எம் தமிழ்ச்சமூகத்தின் நிலையோ தலைகீழாகவிருக்கின்றது.

இளைஞர்களும், நடுத்தரவயதினர்களும் எம் தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்து மரணமடைந்து கொண்டிருப்பது தமிழர் தேசத்தின் பெரும் இழப்பாகும்.

அநேகமான புலம்பெயர் தேசங்களில் கொரொனா தன் உச்ச எல்லையினைத்தொட்டுவிட்டது.
இன்னும் சிறிதுகாலம் நாம் தாக்குப்பிடித்தால் இந்த பேரிடலிருந்து மீண்டு விடலாம்.
அதுவரையில் சாதுரியமாக நடந்து எம் இனத்தின் இருப்பை தக்கவைப்போம்.

கொரோனா தொற்றால் சிகிச்சைபெற்றுவரும் அனைத்து எம் உறவுகளும் விரைவில் குணமடையவேண்டும் என்பதே உலகத்தமிழினத்தின் வேண்டுதலும், ஆசையுமாகும்.

இதுவரை இக்கொடிய தொற்றால் புலம்பெயர் தேசங்களில் மரணித்த எம் அனைத்து உறவுகளிற்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

தீபச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here