யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கலாம். எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க யுத்தக் குற்ற விசாரணையை வரவேற்பதாக,முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கலாம். எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே எனது தெளிவான நிலைப்பாடாகும். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது நாங்கள் குற்றமற்றவர் என்பதனை நிரூபித்துக் கொள்ள முடியும் .
இராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக யுத்கத் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதனை உத்தரவாதத்துடன் குறிப்பிட முடியும்.
நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் இடம்பெறவில்லை. சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறித்து எனக்குத் தெரியும்.
எனினும், சர்வதேச சமூகத்தின் மீதோ அல்லது ஊடகங்களின் மீதோ இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் போர் தொடுப்பது நியாயமற்றது.