முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் இன்று 12.04.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை வயலுக்குச் சென்ற உழவு இயந்திரம் ஆனது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது-26) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு வேளையிலும் தமிழர் தாயகப் பகுதிகளில் விபத்து மரணங்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றமை வருந்தத் தக்கது.