மட்டக்களப்பில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

0
403

Untitled-FDfdfdfd7மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை அதிகாரியின் படுகொலையை கண்டித்தும் அதன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. கிரிதரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

நல்லாட்சியில் எமது பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை உடனடியாக கைது செய், எமது பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here