தான் மகிழ்வை உணர்கின்ற எல்லாத் தருணங்களிலும் மற்றொரு ஜீவராசியை புசித்துக்கொண்டிருக்கின்றான்..மனிதன்.
இயற்கை மீதான மனிதனது சீண்டலின் உச்ச வெளிப்பாடுதான் இன்றைய கொடிய வைரஸ் பரம்பல் என்கின்றனர் சூழலியல் விஞ்ஞானிகள்.
உள்ளிருப்பு சிறைக்காலத்திலிருந்து மீளும் சமயத்தில் மனிதன் சக ஜீவன்கள் மீது கருணை காட்டுபவனாக.. ஆகக் குறைந்தது ‘குழந்தைகளை’ கொன்று புசிக்காதவனாக மாறி வரவேண்டும் என்று விலங்குகளுக் காகக் குரல் கொடுப்போர் எதிர்பார்க் கின்றனர்.
கூடி உணவருந்தும் கொண்டாட்டங்கள் தடைப்பட்டுப்போனதால் ஜரோப்பா எங்கும் கொல்களங்களில் பல இலட்சக்கணக்கான ஆட்டுக்குட்டிகளை இறைச்சிக்காகக் கொல்வது இடை நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
அந்தப் பிஞ்சுகளின் அற்ப ஆயுளை சற்று நீட்டிவிட்டிருக்கிறது கொரோனோ காலம்..
உல்லாசமே வாழ்க்கை என்று தலைகால் புரியாமல் ஓடிக்கொண்டிருந்த மனிதனைப் பிடித்து நிறுத்தி ஓரிடத்தில் இருத்தி இயற்கை சொல்லிச் செல்லும் சேதி என்ன?
*படத்தில் :

ஈஸ்டருக்கு வெட்டுவதற்காக இலக்கம் குறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் தம் கதி தெரியாமல் தாயின் அருகில் துள்ளி விளையாடுகின்ற காட்சி.
(குமாரதாஸன்)