கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 16 லட்சத்து 03ஆயிரத்து 719 பேராக உயர்ந்துள்ளது.
இதுவரை உலகளவில் 95 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டு 16 ஆயிரத்து 691 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டு 15 ஆயிரத்து 447 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்து 279 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 607 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை ஓரு லட்சத்து 17 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டு 12 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 6 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டு 227 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.
(தினக்குரல்)