உடையார்கட்டு தெற்கை பிறப்பிடமாக கொண்ட சுதாகரன் ருபிகன் (வயது 18) எனும் இளைஞர் ஒருவர் நேற்று 08/04/2020 புதன்கிழமை விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணி புரிந்து வரும் இவர் குறித்த வர்த்தக நிலையத்தின் களஞ்சிய வீட்டின் ஒருபகுதியில் தங்கிவந்த நிலையில், நீண்ட நாள் ஊரடங்கின் காரணமாக வேலை இன்மையாலும் குடும்பத்தை பிரிந்தமையினாலும் அதிகம் பாதிக்கப்பட்டார்.
இது ஒரு புறமிருக்க, ஊர் போக பாஸ் அனுமதியும் கிடைக்காதமையால் மன விரக்தியடைந்தமையே தற்கொலை செய்ய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தென்மராட்சி – மீசாலை கிழக்கில் இன்று (09.04.2020) வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டூர் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான
ராஜா வேல்ட்டின் என்று அழைக்கப்படும் இவர் மண்டூர் கோட்டைமுனை கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை பிரிந்து தனியாக பல காலமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இன்று தனது மனைவி வசிக்கும் இடத்திற்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைகள் ஒரு பக்கம்.. நோயின் கொடுமை ஒரு பக்கம்.. பசியின் கொடுமை ஒரு பக்கம் என உலகம் எதைநோக்கிச் செல்கிறது ?