மன்னார் விபத்தில் சகோதரிகள் இருவர் கோரமாகப் பலி!

0
536

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (09.04.2020) வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சகோதரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற உந்துருளியும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் உந்துருளியில் பயணித்த குறித்த இரு சோதரிகளும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (வயது 40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது 25). இவர் மன்னார் அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரியாவார்.
குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு உந்துருளியில் பயணித்த போதே குறித்த விபத்து இடம்பெற்றது. சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here