பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் (வயது 30) லண்டனில் இன்று 09.04.2020 வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளார் .
பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர பிரஜா உரிமைபெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய நிமித்தம் லண்டன் சென்ற நிலையிலேயே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் , TTN தமிழ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இவரது ஆளுமை மிகப்பெரியது .
இவரது இழப்பு எமக்கெல்லோருக்கும் பேரிழப்பாகும் . இவரது இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.